போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கொழும்பில் படகுச் சேவை ஆரம்பம்( ஐ. ஏ. காதிர் கான் )

   போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில்,  புறக்கோட்டையிலிருந்து கொம்பனித்தெரு -  யூனியன் பிளேஸ் வரை படகுச் சேவையை ஆரம்பிக்க, காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் நடவடிக்கைகளை  எடுத்துள்ளது.
   இதற்கமைய, இலங்கைக்  கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பயணிகள் படகில் முதலாவது கண்காணிப்பு சுற்றுப்பயணத்தை, நகர்ப்புற மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேற்கொண்டார்.
   இந்தப் படகுச்  சேவையை ஆரம்பிப்பதன் மூலம், புறக்கோட்டையிலிருந்து யூனியன் பிளேஸ் வரை 15 நிமிடங்களிலும் மிகக் குறைவான நேரத்தில் பயணிக்க முடியுமென்பதோடு, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு  இது ஒரு சிறந்த தீர்வாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. 

( ஐ. ஏ. காதிர் கான் )

Share:

No comments:

Post a Comment