திருக்கோணேஸ்வரம் கோவிலில் நடைபெற்றுள்ளதாக பரப்பப்படும் தகவல்கள் பொய்யானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கோணேஸ்வரம் கோவிலில் எந்தவித அசம்பாவிதமும் இடம்பெறவில்லை என, கோவில் நம்பிக்கை பொறுப்பு சபையின் தலைவர் க. அருள் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்வாறான வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று 28ம் திகதி காலை கோவில் சிலை மற்றும் கலசங்கள் உடைந்து விழுந்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியுள்ளன.

இதனையடுத்து, அதிகாலை முதல் தொலைபேசி மூலம் பலர் அழைத்து கோவில் கலசம் மற்றும் சிலைகள் உடைந்து விழுந்ததா எனக் கேட்டனர். அவ்வாறு எந்த அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என்பதை அறிவித்தோம் என்றார் அவர்.

மேலும், இதுபோல திருகோணமலை மாவட்டத்தில் எந்த ஒரு ஆலயத்திலும் அசம்பாவிதங்கள் இடம்பெறவில்லை என மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விசாரித்ததன் அடிப்படையில் தெளிவாகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.