ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் அவர்கள் பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்திலிருந்து ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிடவுள்ளார்.

அவர் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். அவர்  ஏற்கனவே சஜித் அணியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல மட்டக்களப்பில் தனித்தும், புத்தளத்தில் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்திலும் ஏனைய மாவட்டங்களில் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியிலும் போட்டியிடுகிறது.

இது தொடர்பாக நாம் ஷாபி ரஹீம் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது, கம்பஹா மாவட்டத்தில் சஜித் அணி சார்பில் பலம் பொருந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள். மேலும், சரத் பொன்சேகா, விஜிதமுனி சொய்சா ஆகியோரும் போட்டியிடுவதால் தன்னால் 13 அல்லது 14 ஆவது இடத்திற்வே வர முடியும். சஜித் அணி 5 அல்லது 6 ஆசனம் அளவிலேயே எடுக்கும் வாய்ப்பு உள்ளதால் எனக்கு அதில் வெற்றி வாய்ப்பு இல்லை. ஆனால் யானையில் (ஐதேக) போட்டியிட்டால் அதில் தனக்கு 3வது இடத்திற்கு வரும் வாய்ப்பு இருக்கிறது. அதிலுள்ள அர்ஜுன ரணதுங்க, ருவன் விஜயவர்தன ஆகியோரை தவிர பிரபலமான வேட்பாளர்கள் இல்லை. எனவே ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.