கம்பஹா வைத்தியசாலையின் பணிப்பாளர் உட்பட அந்த வைத்தியசாலையை சேர்ந்த 8 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளி என அடையாளம் காணப்பட்டுள்ள ஒருவர் அண்மையில் வைத்தியசாலையின் பணிப்பாளரது அலுவலகத்திற்கு வந்து சென்றுள்ளதாக கிடைத்துள்ள தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் இதுவரை 622 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் 134 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.