- இந்திய நேரப்படி புதன் காலை 04.41 மணி நிலவரப்படி உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 14,28,428 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
- இவர்களில் 82,020 பேர் உயிரிழந்துள்ளனர். 3,00,198 பேர் குணமடைந்துள்ளனர் என்று அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
- உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள நாடான அமெரிக்காவில் இதுவரை 3,96,223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- அதிகபட்சமாக இத்தாலியில் 17,217 பேர் இறந்துள்ளனர்; ஸ்பெயினில் 14,045 பேர் இறந்துள்ளனர்.
- 10,000க்கும் மேலான இறப்புகளைச் சந்தித்துள்ள மூன்றாவது நாடாகியுள்ளது பிரான்ஸ். அங்கு இதுவரை 10,328 பேர் இறந்துள்ளனர்.
- கொரோனா வைரஸ் உருவான சீன நகரமான வுஹானில், கோவிட்-19 தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்கள் வெளியே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
(BBC)