திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆண்டான் குளம் பிரதேசத்தில் நேற்று இரவு 11.30 மணியளவில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட போதுபொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
போதை பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே மேற்படி கைது இடம்பெற்றதாக போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஆறு பெண்களும் ஏழு ஆண்களும் அடங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் சிறிமா புர, 4ம் கட்டை, சீனன்குடா, ஆண்டான் குளம் பிரதேசங்களைச் சேர்ந்த 22 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் அடங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.
44 வயதான பெண் ஒருவரின் வீட்டில் மேற்படி சூதாட்டம் நடை பெற்று வந்ததாகவும் கைதுசெய்யப்பட்ட நபர்களை உப்புவெளி பொலிஸார் வசம் ஒப்படைத்ததாக திருகோணமலை மாவட்ட போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.
-திருகோணமலை நிருபர் கீத்-
adaderana
கருத்துகள்
கருத்துரையிடுக