கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் பூரணமாக சுகமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை 42 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தற்போது 132 பேர் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்கள் கொழும்பு IDH வைத்தியசாலையிலும், வெலிகந்த மற்றும் முல்லேரியா ஆதார வைத்திய சாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் 180 பேர் இதுவரை கொரோனா நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 250 க்கும் அதிகமானவர்கள் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்துரையிடுக