கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக வருமானமின்றியிருப்போருக்காக அரசாங்கம் வழங்கும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை முச்சக்கரவண்டி சாரதிகளுக்கும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதேபோன்று பாடசாலை மாணவர் வாகன சாரதிகளுக்கும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாடசாலை விடுமுறை காலத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடும் பஸ் அல்லது வேன் உரிமையாளர்கள், பெற்றோர்களிடம் மாதாந்தக் கட்டணத்தை அறவிடுவது குற்றமாகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான பஸ் மற்றும் வேன் உரிமையாளர்கள் தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாடு தற்சமயம் எதிர்கொண்டுள்ள நிலைமைகளுக்கு மத்தியில் இவ்வாறு பெற்றோரிடம் கட்டணம் அறவிட்டு, அவர்களை இக்கட்டான நிலைமைக்கு தள்ள வேண்டாம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.