எலிக் காய்ச்சலினால் உயிரிழந்த கடற்படை அதிகாரியின் இறுதி கிரிகை, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர் போன்று இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்படும்.

இது தொடர்பாக இலங்கை கடற்படையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
எலிக் காய்ச்சல் நோய் நிலைமையின் காரணமாக கொழும்பு கடற்படை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்றுவந்த கடற்படை அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.
எலிக் காய்ச்சல் நோய் நிலைமையின் காரணமாக கொழும்பு கடற்படை பெரிய ஆஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த கடற்படை அதிகாரியொருவர் 2020 ஏப்ரல் 25 ஆம் திகதி காலமானார்.
இவ்வாறு காலமானவர் கடற்படை தலைமை நிலையத்திற்கு உட்பட்டதாக கடமையாற்றிய கலேன்பிதுனுவௌ பிரதேசத்தைச் சேர்ந்தவரான 35 வயது லெப்டினென்ட் கமாண்டர் ( தொண்டர்) தொடம்வல கெதர சுனில் பண்டார தொடம்வல என்ற அதிகாரியாவதுடன், இவர் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி நோய் நிலைமையின் காரணமாக கொழும்பு கடற்படை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த அதிகாரி சிகிச்சைப் பெற்றுவந்த காலப்பகுதியில் வைத்தியர்களினால் இவர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது இவர் எலிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருப்தாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போன்று வெலிசறை கடற்படை முகாமிற்குள் கொவிட் 19 வைரசு தொற்று பரவியதைத் தொடர்ந்து மேற்கொள்ள்பட்ட பரிசோதனைகளில் இந்த கடற்படை அதிகாரி கொவிட் 19 வைரசு தொற்றிற்கு உள்ளான நபர் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கமைவாக எலிக் காய்சச்ல் நோய்க்காக சிகிச்சைப் பெற்றுவந்த போது இந்த நோய் நிலைமை அதிகரித்ததன் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது இந்த அதிகாரி 2020 ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி காலமானார்.
இந்த மரணம் கொவிட் 19 வைரசு தொற்றின் காரணமாக ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட போதிலும் , வெலிசறை கடற்படை முகாம் கட்டிடத் தொகுதியில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமையின் அடிப்படையில் கொவிட் தொற்றின் காரணமாக உயிரிழந்த நபரின் இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்படும் நடைமுறை விதிகளுக்கு அமைவாக இந்த கடற்படை அதிகாரியின் இறுதி கிரியைகளை மேற்கொள்வதற்கு ராகம நீதிமன்ற மருத்துவ அதிகாரியினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த பரிந்துரைகளுக்குட்பட்டதாக பூதவுடல் தொடர்பான இறுதி நடவடிக்கைகள் கடற்படையினருக்கான கௌரவத்துடன் மேற்கொள்ளப்படவுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.