வாசித்தலும் மனநலமும் 
பகுதி 1 

வாசிப்பு ஒரு சிகிச்சையாகும்

இன்றைய சமூகம் வாசிப்பதில் பின்னே போய் இருக்கிறது என்பதை நாமே கூச்சமில்லாமல் சொல்வது எவ்வளவு வேதனையை தருகிறது.
‘முஸ்லிம் சமூகம் அதிக அளவு வாசிக்கத் தொடங்கினால் அது மனித நாகரீகத்திற்கு தலைமை தாங்கிச் செல்லும்’ என்று கலாநிதி ஹிஷாம் அத்தாலிப் அவர்கள் தலைமைத்துவப் பயிற்சி எனும் அவரது நூலில் குறிப்பிடுகிறார்.
ஆன்மீகமும் வாழ்க்கை சார்ந்த விடயங்களும் சேர்ந்ததாக வாசிக்கும் பழக்கமுடையவர்களாக நாம் இருந்தால் அந்த வாசிப்பு சிந்திக்கவும் செயற்படவும் தூண்டி மிகச்சிறந்த தலைமைத்துவ பண்புகளை கொண்ட சமூக உறுப்பிணர்களாக எம்மை மாற்றிவிடும்.
இன்று மேல் நாட்டவர்களில் அதிகமானோர் வாசிப்புப் பழக்கம் உடையவர்களாக தம்மை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். மனஅமைதிக்கு சிகிச்சையாக வாசிப்பை ஒர் கருவியாக அவர்கள் பயன்படுத்துகிறார்கள். மனதிற்கு அமைதியை தரக்கூடிய ஏனைய அனைத்துவிதமான மனத்தளர்வு பயிற்சிகளைவிடவும் வாசிப்பு பெரும்தாக்கம் புரிவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

இசை போன்ற சம்பிரதாயமான முறைகளைவிட அரை மணிநேர வாசிப்பு மனஉழைச்சலை குறைக்க பெரிதும் துணைபுரிகிறது என 2009ஆம் ஆண்டு சசெக்ஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஒரு ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

2015 ஆம் ஆண்டு 'ரீடின்ங் ஏஜன்ஸி' எனும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் மூலம்  - வாசிப்பு பெற்றார் பிள்ளைகளுக்கு மத்தியில் நெருக்கமான உறவை வளர்க்கச் செய்கிறது. சுய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. தனது அடையாளத்தை தெளிவு படுத்துகிறது. ஏனைய கலாச்சாரங்கள் பற்றிய புரிதலை ஏற்படுத்துகிறது. மனச்சோர்வையும் மனப்பதகளிப்பையும் நீக்குகிறது என உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

சில மனோரீதியான பாதிப்புகளுக்கு வாசிப்பை ஒர் சிகிச்சை நுட்பமாக மருத்துவர்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதை பைபிளோ தெரபி - புத்தகத்தின் மூலமான சிகிச்சை என குறிப்பிடப்படுகிறது.

வயதிற்குச் செல்லும் போது ஏற்படும் டிமென்ஸியா எனும் ஞாபகமறதி நோயிலிருந்து பாதுகாப்பு பெறவும் வாசிப்பு துணையாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

எமது உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைக்க நாம் எம்மை பெருமளவு வாசிப்புப்பழக்கம் உள்ளவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறோம் என்பதை இதிலிருந்து புரியவேண்டும். அதேநேரம் விடயங்களை கற்றுக்கொள்வதற்காக, ஆராய்ந்து தெரிந்துகொள்வதற்காக வாசிக்கக்கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். அப்போதுதான் வாசிப்பு எம்மை செம்மைப்படுத்தும், பூரணமாக்கும், சிந்தனையாளாராக மற்றும்.
--------------------------------------
அஸ்ஹர் அன்ஸார் 
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.