இரண்டாவது தொடர்...........................

மத்தியகிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகள், பாலஸ்தீனில் உள்ள போராட்ட இயக்கங்கள், ஈரானிய ஆதரவுபெற்ற லெபனானின் ஹிஸ்புல்லாஹ் இயக்கம் ஆகியவற்றின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இஸ்ரேல் தன்னை பாதுகாப்பதற்கு அதிக விலைகொடுத்து வருகின்றது.

இஸ்ரேலை பாதுகாப்பதற்காக வருடா வருடம் பெருமளவு நிதியினை அமெரிக்கா வழங்கிவருகின்றது. இதனால் தன்னை வாழவைத்துக் கொண்டிருக்கின்ற அமெரிக்காவுக்கு இஸ்ரேல் மிகவும் நன்றிக்கடனுடனும், விசுவாசமாகவும் செயல்பட்டு வருகின்றது.

அமெரிக்காவும், பிரித்தானியாவும் சேர்ந்து களவாக பெற்றெடுத்த குழந்தைதான் இஸ்ரேலாகும். இரண்டாவது உலகமகா யுத்த காலத்தில் இஸ்ரேல் என்றொரு நாடு இருந்ததில்லை.

நூற்றாண்டு காலமாக துருக்கியை தலைமையகமாகக் கொண்ட உதுமானிய பேரரசு அசைக்கமுடியாத உலகின் பலமிக்க இஸ்லாமிய சாம்ராஜ்யமாக அப்போது இருந்தது.

அது உலகின் வளங்களை சுரண்டிக்கொண்டிருந்த அன்றைய வல்லரசுகளான பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு பெரும் தலைவலியாக இருந்தது.

அத்துடன் பலமுள்ள சக்தியாகவும் பிரித்தானியா பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு எதிரியாகவும் இருந்த ஜேர்மன், ஹங்கேரி போன்ற நாடுகளுடன் உதுமானிய சாம்ராஜ்யம் நல்லுறவை பேணிவந்தது.

இஸ்லாம் என்றரீதியில் ஒற்றுமைப்பட்டிருந்த சாம்ராஜ்யத்துக்குள் நீண்டகால முயற்சியின் பலனாக தேசியவாதத்தை விதைத்து அதன் மூலம் உதுமானிய சாம்ராஜ்யத்துக்குள் உள்ளக பிளவுகளை ஏற்படுத்தி வெற்றிகண்டது பிரித்தானியா.

அதாவது இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்ய முழுத்தகுதியும் பெற்றவர்கள் அரேபியர்கள் என்றும், துருக்கியர்கள் போன்ற அரபியல்லாதவர்கள் அதற்கு தகுதியற்றவர்கள் என்ற பிரச்சாரத்தை வலுவடயச்செய்தது பிரித்தானியா.

இதற்காக அரேபியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தி ஒப்பந்தமும் செய்தது பிரித்தானியா. அதில் உதுமானிய சாம்ராஜ்யத்தை உடைப்பதற்கு பிரித்தானியாவுக்கு அரேபியா உதவவேண்டும் என்றும், அதேபோல் அரேபிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவதற்கு அரபுக்களுக்கு பிரித்தானியா உதவுமென்பதுதான் அந்த ஒப்பந்தமாகும். 

முட்டாள்களான அரபுக்கள் பிரித்தானியாவின் சூழ்சிகளை புரிந்துகொள்ளவில்லை. அரேபியாவுடன் ஒப்பந்தம் செய்த அதேநேரம், உதுமானிய இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை எவ்வாறு பங்குபோடுவது என்று பிரான்சுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடாத்தியது பிரித்தானியா.

1916 ஜூன் மாதத்தில் முதலில் அரேபியப் படைகள் உள்ளேயிருந்து போர்தொடுக்க, வெளியே ஒவ்வொரு முனையிலிருந்தும் பிரித்தானியாவும், பிரான்சும் போர்தொடுத்தனர். இறுதியில் உதுமானிய இஸ்லாமிய பேரரசு வீழ்ந்தது. 

ஏற்கனவே திட்டமிட்டதுபோல் இஸ்லாமிய பேரரசை பிரித்தானியாவும், பிரான்சும் பங்குபோட்டுக் கொண்டது. இது நடைபெற்றது முதலாவது உலகமகா யுத்த காலப்பகுதியிலாகும்.

அதன்பின்பு பாலஸ்தீன் பகுதியில் யூதக் குடியேற்றத்துக்கு எந்த தடைகளும் இருக்கவில்லை. படிப்படியாக யூதக் குடியேற்றம் ஆரம்பித்தது.

உதுமானிய பேரரசு இருக்கும் வரைக்கும் பாலஸ்தீன் பகுதியில் யூதர்களினால் குடியேற முடியவில்லை.

பாலஸ்தீன மண்ணில் யூத சாம்ராஜ்யத்தை நிறுவுவதற்காக 1897 இல் சியோனிச இயக்கம் உருவாக்கப்பட்டது. ஆனால் உதுமானிய பேரரசு இருக்கும் வரைக்கும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.   

அதாவது பிரித்தானியாவுடன் சேர்ந்து உதுமானிய சாம்ராஜ்யத்தை துண்டு துண்டாக உடைப்பதற்கு அரேபியா ஒத்துழைக்காமல் இருந்திருந்தால், உதுமானிய பேரரசு வீழ்ச்சியடைந்திருக்காது. அந்த நிலையில் பாலஸ்தீனில் யூதர்கள் குடியேறியிருக்க வாய்ப்பில்லை. யூதர்கள் இல்லாமல் யூத நாடும் உருவாகியிருக்காது. 

எனவே உலகின் முதன்மை பயங்கரவாதியான இஸ்ரேல் தேசத்தை உருவாக்குவதற்கு களம் அமைத்துக் கொடுத்தது அரேபியா என்பது இதன் சுருக்கமாகும். 

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது

நாளை தொடரும்.................

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.