அலி பாபா ஸ்தாபகர் ஜெக் மா இலங்கைக்கு உதவி!


இலங்கையில் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, சீனா வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு அப்பால், 20,000 இற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை ஆடைகளை இலங்கைக்கு வழங்க சீனாவின் முதல் தர வர்த்தகரான ஜெக் மா (அலி பாபா நிறுவன ஸ்தாபகர்) முன்வந்துள்ளார்.
இதன் பெறுமதி 1,30,000 டொலர் பெறுமதியானதென்றும் இதனை ஏற்றிய சைனா ஈஸ்டன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான பொருள் விநியோக விமானமொன்று இன்று இரவு இலங்கையை வந்தடையவுள்ளதென்றும் இலங்கையிலுள்ள சீன தூதுவராலயம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்