சம்மாந்துறையில் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக விசேட துஆப் பிரார்த்தனை

Rihmy Hakeem
By -
0
(எம்.எம்.ஜபீர்)

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட  விசேட துஆப் பிரார்த்தனை சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலில் இன்று காலை இடம்பெற்றது.

இவ்துஆப் பிரார்த்தனையை  சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை,  ஜம்மியத்துல் உலமா சபை, மஜ்லிஸ் அஷ் ஷூறா சபை ஆகிய முற்சபைகள் இணைந்து ஏற்பாடு செய்தனர். துஆப் பிரார்த்தனையினை மௌலவி மஹ்ரூப், மௌலவி பசீல் ஆகியோர்கள் நிகழ்த்தினர்.

இதில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, பொலிஸ் உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை,  ஜம்மியத்துல் உலமா சபை, மஜ்லிஸ் அஷ் ஷூறா சபை முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் இணைந்துகொண்டனர்.





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)