இலங்கை அரசும் வாடகை வழங்குபவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் நிவாரண சலுகைகளை வழங்க வேண்டும் - ஹில்மா பாத்திமா


இன்று covid-19 மூலமாக உலக நாடுகள் பல்வேறு பிரச்சினைகளை முகம் கொடுத்துக்கொண்டிருக்கிறன.மிக முக்கியமாக இலங்கையில் அரசாங்கத்தோடு சேர்ந்து தனி நபர்கள் எதிர்நோக்கின்ற எதிர்வுகள் வாழ்வாதார சூழலில் பாரியளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.பலரது வருமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

பலர் நிறுவனங்கள் வழங்குகின்ற வருமானத்தை போய் எடுக்க முடியாமல் இருக்கின்றனர்.மேலும் நாள் கூலி பெறுவோர் வருமானமே இல்லாமல் தவிக்கின்றனர். ஒரு பக்கம் இவ்வாறிருக்க இன்னொரு பக்கம் பொருட்களின் விலையும் மக்களின் தேவைகளும் அதிகரித்துள்ளன.
ஊரடங்கு உத்தரவின் காரணமாக குடும்பச்செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் அடிப்படைத்தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மிக முக்கியமாக வாடகை செலுத்துவதில் மக்கள் பல்வேறு சிரமங்களை எதைர்கொள்கின்றனர்.அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் வாடகை செலுத்துவது எவ்வாறு என்று சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.அன்றாட உணவுக்கே தள்ளாடுகின்றவர்களுக்கு வாடகை செழுத்துவதில் ஏற்பட்டிருக்கின்ற சிக்கலை மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
இது எப்போது நிறைவடையும் என்று பார்த்தால் “மக்களின் நடத்தையைப் பொருத்துத்தான் சாதாரண நிலையில் மக்களை நடமாடச் செய்ய முடியும்” என்று நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

உலகில் பல்வேறு நாடுகள் (New Zealand, Singapore etc) 3,4 மாதத்திற்கு குத்தகை, மாத வாடகையாக இருந்தாலும் வீட்டு வாடகையாக இருந்தாலும் அறவிட முடியாது என்று அறிவித்துள்ளது.
தற்போது வீட்டில் முடங்கிக்கிடக்கின்ற மக்கள் covid-19 பாதிப்பு முடிவடைந்ததும் சாதாரண வாழ்க்கைக்குத்திரும்ப பல்வேறுபட்ட முறையில் இரவுபகலாக உழைக்க வேண்டியிருக்கிறது.

எனவே இவற்றை முன்னிலைப்படுத்தி இலங்கை அரசும் வாடகை வழங்குபவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் நிவாரண சலுகைகளை வழங்க வேண்டும்.

கருத்துகள்