கொரோனா பற்றி பேஸ்புக்கில் பொய்யான கருத்துக்களை பரப்பிய பெண் கைது (மீரிகம)

Rihmy Hakeem
By -
0

கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு பொய்யான கருத்துகளை பரப்பிய குற்றச்சாட்டில், மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த சந்தேகநபர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

மீரிகம, திவுல்தெனிய, நால்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை இன்றையதினம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண் புதுக்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்டதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா உள்ளிட்ட சட்டத்தரணிகள் அவருக்காக நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக சமூக வலைத்தளங்களின் ஊடாக பல்வேறு கருத்துக்களை பரப்பிய குற்றச்சாட்டில் பெண்கள் இருவர் உட்பட 17 பேரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இதுவரையில் கைது செய்துள்ளனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)