ஜெய்லானியும், அவிழ்க்கப்படாத முடிச்சுக்களும் - பஸ்ஹான் நவாஸ்

Rihmy Hakeem
By -
0


இரத்தினபுரி மாட்டத்தின் பலாங்கொடை நகரின் மீது நாட்டின் தொல்பொருளியளாளர்கள் கடந்த தசாப்பத்தில் பகிரங்கமாக  அதிக கரிசனை காட்டுவதை அவதானிக்கின்றோம்.

குறிப்பாக பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களின் முழுக் கவனமும் பலாங்கொட நகரின் மீது குவிந்துள்ளது. பாடசாலைக் காலங்களின் இலங்கையின் நாகரிகம் பற்றி கற்கையின் போது " பலாங்கொட மனிதன்" பற்றி கற்றது நினைவில் இருக்கலாம்.

பலாங்கொட நகரின் "கூரகல" "කූරගල" மலைப்பகுதி வரலாற்றில் முக்கியம் வாய்ந்த இடமாக இன்று கருதப்படுகிறது. தமிழ்பேசும் முஸ்லிம்கள் இந்த இடத்தை "தப்தர் ஜெய்லானி" என்று அழைக்கிறார்கள்.

செய்ஹ்  அப்துல் காதிர் ஜீலானி றஹ்மஹூல்லாஹ் அவர்கள் இந்த மலைக்கு வருகை தந்நதமையினாலேயே இந்த இடம் தப்தர் ஜெய்லானி என்று அழைக்கப்படுகிறது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும்.

மொரோக்கோவின் நாடுகாண் பயணியும் , நீதியரசரும், சட்டத்துறை அறிஞரருமான இப்னு பதுாதா அவர்கள் மன்னார், ருவன்வெல்ல, யடியன்தொட்ட  ஊடாக பாவா ஆதம் மலையை தர்சித்ததன் பின்னர்  தப்தர் ஜெய்லானிக்கு விஜயம் செய்ததாகவும் பின்னர் தெவிநுவர மாத்தறையை சென்றடைந்ததாகவும் வரலாற்று ஆசிரியர் Denis Fernando அவர்கள் கூறுகிறார்கள்.

அரபு உலகிற்கு தேவையான வாள்களை (Swards) தயாரிப்பதற்கான உருக்கு ஜெய்லானி பிரதேசத்தில் இருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டதாக சப்ரகமுவ பல்கலைக்கத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட பேராசிரியர் Dr Gill Juleffer அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த விஞ்ஞானியும், அரபு மெய்யியல் துறையின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான "அல் கிஹ்ந்தி" அவர்களின் கூற்றுக்கமைய குராஸான், பார்ஸ், யெமன் ஆகிய இடங்களுக்குத் தேவையான வாள் இந்த இடத்தில் உற்பத்தி செய்ப்பட்டதாக கூறியிருக்கிறார்கள். கலாநிதி ஆனந்த குமாரசுவாமி அவர்கள் எழுதிய Medieval Sinhalese Art என்று நூலில் இது பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அமெரிக்காவின்  Harvard பல்கலைகழகத்தின் ஆய்வாளர் susan schomburg,
அமெரிக்காவின் Colorado பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையின் பேராசிரியரும் இலங்கை முஸ்லிம்கள் பற்றிய வராலாறுகளை ஆவணப்படுத்தியவருமான பேராசிரியர் Professor Dennis B McGilvray ஆகியோர் தப்தர் ஜீலானியை  முஸ்லிம்கள் எவ்வாறு உரிமை கொண்டாட முடியும்  என்பதை வரலாற்று ஆய்வுகளின் ஊடாக நிரூபித்துள்ளார்கள்.

 பிரதேசம் கற்பனைகளை தாண்டிய உண்மைகள் நிறைந்த அருள் நிறைந்த பகுதி.

 பாவா ஆதம் மலையை Adam's Peak தர்சித்த பெரும்பாலானவர்கள்  அரபு  அறிஞர்களும் இந்த இடத்திற்கு விஜயம் செய்துள்ளார்கள். ஏன் அவர்கள் இந்த இடத்திற்குச் சென்றார்கள்? இதன் முக்கியத்துவம் தான் என்ன? இந்தப் மலையின் மர்மம் என்ன? ஏன் இது இலங்கை முஸ்லிம்களுக்கு முக்கியம் வந்தது போன்ற பல்வேறு விடயங்ளுக்கு இந்த ஆய்வு நூல் விடைதேடியுள்ளது.

Dafther Jailany
"A historical Account of the Dafther Jailany Rock cave mosque என்ற இந்தப் புத்தகத்தை முன்னாள் அமைச்சரும், இரத்தினபுரி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான M L M அபூஸாலி அவர்கள் எழுதியுள்ளார்கள்.

 M L M அபூஸாலி அவர்கள் ரத்வத்த குடும்பத்தின் கோட்டையிலிருந்து   1977ம் ஆண்டு தொடக்கம் 1994ம்  ஆண்டு வரை பெரும்பான்மை சிங்கள மக்களினால் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர். இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை ஆவணப்படுத்துவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கும் சேவைகளுக்காகவும், நாம் அவர்களின் மறுமை வாழ்வுக்காகப் பிரார்த்திப்பது அவசியமாகும்.

(பஸ்ஹான் நவாஸ்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)