சுகாதார அமைச்சு ICTA உடன் இணைந்து புதிய APP இனை வெளியிட்டது ; வைத்திய ஆலோசனை உட்பட பல சேவைகளை பெற முடியும்

Rihmy Hakeem
By -
0


சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சு தகவல் தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல் நிறுவனத்துடன் (ICTA) இணைந்து "My Health Sri Lanka" என்ற ஒரு புதிய ஸ்மார்ட் கைத்தொலைபேசி செயலியை (App) அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த App கொவிட் 19 இனுடைய தற்போதைய நிலை மற்றும் ஒன்லைன் வைத்திய ஆலோசனை சேவை போன்ற பல அம்சங்களை கொண்டுள்ளது.

 நாட்டில் தற்போதுள்ள இடர் நிலையை கருத்தில் கொண்டு இந்த சேவையை செயற்படுத்தி பாவனை செய்யுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)