உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தினால், உலக சுகாதார அமைப்பின் ஊடாக உதவிகளைப் பெற்றுவரும் இலங்கைப்போன்ற நாடுகள் பாதிக்கப்படக்கூடுமென, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு ஐ.தே.க தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அனுப்பிவைத்துள்ள கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா உலக சுகாதார அமைப்பு மீது குற்றஞ்சுமத்தி எடுத்துள்ள குறித்த தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென, ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், உலக சுகாதார அமைப்பு மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க அதுவரை நிதியுதவிகளை அமெரிக்கா தொடர்ச்சியாக வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.   
Tamil Mirror

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.