கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் சற்று முன் மரணமடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் 72 வயதுடைவர் என்றும் குருநாகல் பொல்பிதிகம பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவருகிறது.

மேலும் அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட கடற்படை வீரர் ஒருவரின் நெருங்கிய உறவினர் எனவும் குறிப்பிடப்படுகிறது.

இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 08 பேர் உயிரிழந்துள்ளதுடன், முதலாவது உயிரிழந்த பெண் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.