ஒன்பதாவது தொடர்..........

ஹமாஸின் போராட்டமும், அதன் வளர்ச்சியும் 

அமெரிக்காவையும், இஸ்ரேலையும் பகைக்க விரும்பாத அரபு நாடுகளும்


ஹமாஸ் இயக்கமானது அல்-குர்ஆன் மனனம் செய்தவர்கள், மார்க்க அறிஞர்கள், முன்னாள் இராணுவ தளபதிகள், மற்றும் பல்துறை அறிவியலாளர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. 

அமெரிக்க பின்னனிகொண்ட உலகில் மிகவும் சக்திவாய்ந்த நாடான இஸ்ரேலுடன் நேருக்கு நேர் நின்று போரிடுகின்ற ஹமாஸ் இயக்கத்தின் உள்ளக கட்டமைப்புக்களை வெளியில் உள்ள யாராலும் அறிந்திட முடியாது.

ஹமாஸ் இயக்க போராளிகளில் பெரும்பாலானோர் ஏதொருவகையில் தொழில் புரிபவர்கள். தலைமைத்துவ உத்தரவு வந்தால் முகத்தை மறைத்துக்கொண்டு போர்க்களத்துக்கு வந்துவிடுவார்கள். சண்டை முடிந்தபின்பு மீண்டும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள்ளும் வேலைக்கு செல்வார்கள். 

பீ.எல்.ஓ இயக்கம் மதச்சார்பற்ற கொள்கையினை கொண்டதுடன் யாசீர் அரபாத் என்ற தனிநபர் ஆதிக்கம் செலுத்துகின்ற சாதாரன அரசியல் நோக்கம் உள்ளதாகவே இருந்தது.

இதனாலேயே இஸ்லாமிய அறிஞரான ஊனமுற்ற ஷேக் அஹமத் யாசீனின் தலைமையில் ஹமாஸ் இயக்கம் கட்டியமைக்கப்பட்டது.

அங்கு பதவிப்போட்டிகள் கிடையாது. யார் பெரியாள் என்ற சண்டைகள் இல்லை. பெயருக்காகவும், விளம்பரத்துக்காகவும் எதுவும் செய்யமாட்டார்கள்.

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை மீட்பது, இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதுடன் இஸ்லாமிய மண்ணில் மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிராகவும் போரிடுவது என்பதுதான் ஹமாஸ் இயக்கத்தின் நோக்கமாகும்.

இவ்வியக்கத்தின் தளபதியான பொறியியலாளர் யஹ்யா அய்யாஸ் அவர்களினால் உலகத்துக்கே முதன் முதலாக மனித வெடிகுண்டு தாக்குதலை அறிமுகப்படுத்தியதுடன், தற்கொலை தாக்குதல் மற்றும் சூட்கேஸ், வைக், கார் போன்றவற்றில் வெடிகுண்டு வைத்து தாக்குதல்களை
நடாத்துவதிலும் நிபுனத்துவம் பெற்றுள்ளார்கள். 

ஹமாஸ் இயக்கத்தின் வளர்ச்சியை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன், அதன் போராட்டத்தை திசைதிருப்பும் நோக்கில், பீ.எல்.ஓ வுக்கு எதிராக போரிடுவதற்கு ஆயுதம் மற்றும் பணம், ஏனைய ராஜ்ய சலுகைகளை வழங்க இஸ்ரேலிய அரசு ஹமாசுக்கு தூது அனுப்பியது.

ஆனால் “அமெரிக்காவும் இஸ்ரேலும் மட்டும்தான் இப்படியான கேவலமான வேலைகளை செய்வார்கள்” என்று கூறி இஸ்ரேலின் ஆசைவார்த்தையை ஹமாஸ் நிராகரித்ததுடன், இஸ்ரேலுடன் எந்த பேச்சுக்கும் இடமில்லை என்ற கொள்கையில் உறுதியாக உள்ளது. 

ஹமாஸ் இயக்கத்தினர் ஆரம்பகாலங்களில் இஸ்ரேலிய பொதுமக்களை தாக்கியதில்லை. ஆனால் இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீன பொதுமக்களையே கொலை செய்ததாலும், ஒவ்வொரு இஸ்ரேலிய பொதுமகனும் ஒரு வருடத்துக்கு கட்டாய இராணுவ சேவையில் ஈடுபடுவதனாலும் இஸ்ரேலியர்கள் அனைவரும் பயங்கரவாதிகளென்று கருதி அனைவர் மீதும் தாக்குதல் தொடுக்கின்றது.   

போர் நடைபெற்ற ஆரம்ப காலங்களில் அதன் தாக்கம் இஸ்ரேலிய தலைநகரான டெல்அவிவில் உள்ள யூதர்கள் உணர்ந்ததில்லை. டெல்அவிவை அண்டிய பிரதேசம் ஒரு பாதுகாப்பான வலயமாக கருதப்பட்டது.

ஆனால் நாளடைவில் ஹமாஸின் போரியல் வளர்ச்சியினாலும், அதன் ராகேட், ஏவுகணைகளின் வீச்செல்லை விஸ்தரிப்பினாலும் டெல்அவிவுக்குள் தாக்குதல் நடாத்தி ஏராளமான இஸ்ரேலியர்களை கொன்றது.

அதன் மூலம் இஸ்ரேலின் ஒவ்வொரு நிலமும் ஹமாசின் ஏவுகணை வீச்சுக்குள் அடங்கியுள்ளது.
இதனால் ஏவுகணை எதிர்ப்பு சாதனங்களை நாடு முழுவதிலும் இஸ்ரேல் நிறுவியுள்ளது.   

ஹமாஸ் இயக்கத்தை ஆயுதத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்காவும், இஸ்ரேலும் அதனை பயங்கரவாத இயக்கம் என்று அறிவித்து தடை செய்ததுடன், ஹமாசுக்கு நிதி வருகின்ற பாதையையும் தடை செய்வதற்காக அரபு நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் வழங்கியது. 

இந்த தடையையும் மீறி ஹமாஸ் இயக்கத்துக்கு ஈரான், சிரியா போன்ற ஒருசில நாடுகள் மட்டுமே நேரடியாக உதவி செய்வதுடன், கட்டார் மறைமுகமாக உதவி வழங்குகின்றது. 

ஹமாஸ் உற்பட இஸ்லாமிய இயக்கங்களுக்கு நிதி உதவி வழங்குவதாக குற்றச்சாட்டினை முன்வைத்து கடந்த 2017 இல் கட்டார் நாட்டுக்கு எதிராக சவூதி அரேபியா, பஹ்ரேன், எகிப்து, ஐக்கிய அரபு ராச்சியம் போன்ற நாடுகள் கூட்டுச்சேர்ந்து பொருளாதார தடை விதித்திருந்தது. 

பல அரபு நாடுகள் அமெரிக்காவையும், இஸ்ரேலையும் பகைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஹமாஸ் இயக்கத்துக்கு எந்தவித உதவிகளும் செய்வதில்லை. அதாவது முஸ்லிம்களின் மூன்று புனித ஸ்தளங்களில் ஒன்றானை மஸ்ஜிதுல் அக்சாவை மீட்பதற்காக போராடுகின்ற போராளிகளை பயங்கரவாதிகள் என்று யூதர்கள் கூறுவதற்கு அரபு நாடுகளும் ஆதரவு வழங்குகின்றது.

இதன்மூலம் அரபு நாடுகள் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதைவிட, அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் கட்டுப்படுகின்றது என்பது புலனாகின்றது.

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது

தொடரும்...............................

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.