ஏறத்தாழ 700 வருடங்கள் பழைமையான மக்பராக்கள், ஸியாரங்கள் - 700 Years Old Maqbaras and Ziyarams in Srilanka

இலங்கையில் முஸ்லிம்களின் இருப்பிற்கு முக்கிய ஆதாரமாக விளங்குகின்ற பழமையான ஸியாரங்கள் பல காணப்படுகின்றன.அவ்வகையில் ஏறத்தாள 700வருடங்கள் பழமையான ஸியாரங்கள் பற்றிய தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

1. அஷ்ரப் வலீயுல்லாஹ், கெச்சிமலை, பேருவளை - Ashraf Waliyullah, Ketchimalai, Beruwela
கி.பி. 1274ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு வந்த இவர்கள் யெமன் நாட்டின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.


2. தர்வீஷ் முஹியித்தீன் வலீயுல்லாஹ் , தப்தர் ஜெய்லானி, கூரகல, பலாங்கொடை - Darvesh Muhiyiddeen Waliyullah, Dafthar Jailani, Kuragala, Balangoda
முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் மாணவரான  இவர்கள், தப்தர் ஜெய்லானிக்கு விஜயம் செய்தார்கள். ஹிஜ்ரி 715 (கி.பி. 1316) ஆம் ஆண்டு வபாத்தான இவர்கள் இங்கேயே அடக்கம் செய்யப்பட்டதுடன், 1922ஆம் ஆண்டு தப்தர் ஜெய்லானியில் பள்ளிவாசல் ஒன்று அமைக்கும் போது நடைபெற்ற அகழ்வுப் பணியின் போது
இவர்களது பெயர் பொறிக்கப்பட்ட மீஸான் கல் கண்டெடுக்கப்பட்டது. அதில் அவரது பெயர் தர்வீஷ் முஹியித்தீன் என்றும்,அவர் மரணமடைந்த ஆண்டு ஹிஜ்ரி 715 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.


3.குராஸான் செய்யித் இஸ்மாயீல் வலீயுல்லாஹ் - கலே பண்டார அவ்லியா ( இலங்கையின் ஒரேயொரு முஸ்லிம் மன்னன்)
Kurasan Seyyid Ismaeel Waliyullah - Gale Bandara Awliya  (One and Only Muslim King in Sri Lanka)
கி.பி. 1328 ஆம் ஆண்டு முதல், மூன்று ஆண்டுகள் இவர்கள் குருநாகலை ஆட்சி செய்தார்கள். சதி முயற்சியின் காரணமாக கொல்லப்பட்ட
இவர்கள் குருநாகலில் அடக்கம்செய்யப்பட்டுள்ளார்கள்.


4. பாவா கூபி வலீயுல்லாஹ், கஹட்டபிடிய , கம்பளை - Bawa Kufi Waliyullah, Kahatapitiya, Gampola
கி.பி. 1344ஆம் ஆண்டு இலங்கையின் பாவதமலையைத் தரிசிக்க வந்த இவர்கள் கம்பளையின் கஹட்டபிடியில் அடங்கப்
பெற்றுள்ளார்கள். இவர்கள் தொடர்பான கட்டுரையொன்று,1995 ஆம் ஆண்டு 'A 14th century Sinhala king's gift to a Muslim Saint' என்ற தலைப்பில் ஆங்கிலப் பத்திரிகையொன்றில் வெளிவந்துள்ளது.இலங்கையின் பழமையான மக்பராக்கள், ஸியாரங்கள் பற்றிய தேடலில் பலர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அதில் 1000 வருடங்கள்
பழமையான மக்பராக்களின் தகவல்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. உங்களது பகுதிகளில் பழமையான மக்பராக்கள் காணப்படின் அவற்றின் தகவல்களை சேகரித்து வைப்பதும், அது பற்றிய ஆய்வுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு அவற்றை வழங்குவதும் இன்றியமையாததாகும்.

இப்ஹாம் நவாஸ்
- Ifham Nawas

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.