கம்பஹா மாவட்டத்தில் இணைந்து பயணிக்க மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியும் , ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரசும் தீர்மானித்துள்ளன என்று வேட்பாளர் சசிகுமார் தெரிவித்தார்.
பொதுத்தேர்தலில் இவ்விரு கட்சிகளும் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தின்கீழ்தான் போட்டியிடுகின்றன.
இந்நிலையிலேயே கம்பஹா மாவட்டத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக இணைந்து பயணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் சசிகுமார், முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் மொஹமட் சீராஸ் ஆகியோர் கம்பஹா மாவட்டத்தில் இணைந்து பயணிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலமேகம் பிரசாந்த்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.