தேசிய அருங்காட்சியக திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அருங்காட்சியகங்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளுக்கு அமைய, எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பொது விடுமுறைகள் தவிர, ஏனைய நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பொதுமக்களுக்காக அருங்காட்சியகங்கள் திறந்திருக்கும் என, தேசிய அருங்காட்சியகத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

அத்தோடு, பிற்பகல் 2.30 மணிக்கு பின்னர் அனுமதிச்சீட்டு வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே வேளையில் உச்சபட்சமாக 15 பார்வையாளர்கள் எனும் வகையில், 30 நிமிடங்களுக்கு ஒருமுறை பார்வையாளர் ஒருவரை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  

www.museum.gov.lk  எனும் இணையத்தளத்தின் மூலம் இது குறித்த விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.