தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணமாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக முடியவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.

தனது வழக்கறிஞர்கள் ஊடாக அவர் இதனை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.

மேலும் தனது உடல்நிலை சரியானதும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை பெற்றுத்தருவதாகவும் அவர் தனது வழங்கறிஞர்கள் மூலம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அம்பாறை பிரதேசத்தில் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நேற்று (22) குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அவருக்கு அறிவித்திருந்தது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.