ஏற்கனவே மூன்று வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான ஜோகோவிச்சும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டென்னிஸ் போட்டிகள் முடங்கியுள்ளன. இதனால் பெரும்பாலான டென்னிஸ் வீரர்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர். இவர்களுக்கு உதவுவதற்காக காட்சி டென்னிஸ் தொடரை உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான ஜோகோவிச் நடத்தினார்.

இதில் பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் இந்தத் தொடரில் கலந்து கொண்ட பல்கேரிய வீரர் டிமிட்ரோவ் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் என்னுடன் நெருங்கி பழகியவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து போர்னா கோரிக், விக்டர் டிரோய்க்கி ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த மூன்று பேரும் அந்தத் தொடரில் பங்கேற்றவர்கள்தான். (அத தெரண தமிழ்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.