ஹொங்கொங்கில் பெய்ஜிங்கின் கடுமையான புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்தும் சீன அதிகாரிகளுடன் வர்த்தகம் செய்யும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கும் சட்டத்தை அமெரிக்கா முன்னெடுத்தால் 'தேவையான அனைத்து எதிர்விளைவுகளையும்' எடுப்பதாக சீனா உறுதியளித்துள்ளது.

ஹொங்கொங்; சுயாட்சி சட்டத்தை அமெரிக்க செனட் சபை ஏகமனதாக ஒப்புதல் அளித்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கையொப்பத்திற்காக வெள்ளை மாளிகைக்கு அனுப்பிய பின்னர் இந்த எச்சரிக்கையை சீனா விடுத்துள்ளது.

இதுகுறித்து சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸின் வெளியுறவு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  'இந்த அமெரிக்க நடவடிக்கை சீனாவின் உள் விவகாரங்களில் பெரிதும் தலையிட்டுள்ளது மற்றும் சர்வதேச சட்டத்தையும், சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளையும் கடுமையாக மீறியுள்ளது.

தவறான பாதையில் செல்ல அமெரிக்க தரப்பு வளைந்திருந்தால், சீனா தேவையான அனைத்து எதிர்விளைவுகளுடனும் உறுதியுடன் பதிலளிக்கும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1997ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சி முடிவடைந்தபோது, 50 ஆண்டுகளாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரங்களை சீனாவின் சட்டம் முடிவுக்குக் கொண்டுவருவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சீனாவின் சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்டம், ஹொங்கொங் மீது புதிய அதிகாரங்களைக் செலுத்தி நகரத்தின் சுதந்திரத்திற்கான அச்சங்களை ஆழமாக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சட்டம் பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதையும், ஹொங்கொங்கின் விவகாரங்களில் வெளிநாட்டு தலையீட்டையும் கட்டுப்படுத்தும் நோக்கமாகக் கொண்டது என்று கூறப்படுகிறது.

கடுமையான சிறைத் தண்டனையுடன் பெய்ஜிங்கிற்கு விசுவாசமற்றதாகக் கருதப்படும் எதிர்ப்பாளர்களையும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளையும் குறிவைக்க இது பயன்படுத்தப்படும் என்று விமர்சகர்கள் அஞ்சுகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.