SLPP இந்தியாவின் BJP, சீனாவின் CCP ஆகியவற்றிடம் நிறைய கற்றுள்ளது ; அவை போன்று எதிர்காலத்தில் எமது கட்சி வர விரும்புகிறேன் - பஷில் ராஜபக்ச

Rihmy Hakeem
By -

தமது கட்சியினை இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சி (BJP), அல்லது சீனாவின் கமியூனிஸ்ட் கட்சி (CCP) போன்று வர செய்வதே தமது இலக்கு என்று ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ச தெரிவித்தார்.

Daily FT ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவானது மேற்படி இரு கட்சிகளில் இருந்தும் நிறைய கற்றுக்கொண்டுள்ளதாகவும், அவை சர்வதேச ரீதியல் சிறந்த இரு கட்சிகள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நேர்காணலின் முழு வடிவம் - ft.lk/opinion/Up-to-the-people-to-give-us-a-two-thirdsmajority-Basil/14-703809