ஜீ.எம்.குமார் 

பலாங்​கொடை, தியவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயர் ஒருவர், பலாங்கொடை பிரதேச செயலகத்திலுள்ள சுமார் 100 அடி உயரமான மரத்திழல் ஏறி, இன்று (27), உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார்.

பலாங்கொடை, ஹந்தகிரிய, தியவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான ஸ்ரீயானி புஷ்பலதா (37) எனும் பெண்ணே, இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். 

தான் தற்போது வசிக்கும் நிலத்தை, தனக்கு சட்டப்பூர்வமாக வழங்கவேண்டும் என்று கோரியே இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



இது தொடர்பாக, பலாங்கொடை பிரதேச செயலாளர் ​ஹேமந்த பண்டாரவிடம் வினவியபோது, குறித்த நிலத்தில் வசிப்பதற்கு, நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும் அதனால், அவருக்கு அந்த நிலையத்தை வழங்க முடியாது என்றும் கூறினார்.

அத்துடன்,  அப்பெண் வசிப்பதற்கு, வேறு ஒரு நிலத்தை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதும், அதற்கு அவர் உடன்படவில்லை என்றும் எனவே, நீதிமன்ற உத்தரவுக்குப் புறம்பாகச் செயற்பட முடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.

தமிழ் மிரர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.