சிறுவர் ஒருவரை துஷ்பிரயோகப்படுத்திய நடன ஆசிரியர் ஒருவர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் விதான பத்திரண தெரிவித்தார்.

அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனால் குறித்த சிறுவன் கடுமையாக மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதாக தெரியவருகிறது.

2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஒரு அரங்கத்தில் நடந்த முகமூடி நிகழ்வுக்கான பயிற்சியின்போது, குறித்த சிறுவனை இரவு உணவை எடுத்துவர தனது காரில் அழைத்துச் சென்று போதைப்பொருள் அடங்கிய பானத்தை குடிக்க கொடுத்து கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்தது.

இந்த சம்பவத்திற்கு முன்னர், அந்த நடன ஆசிரியர் 3 வயது குறைந்த சிறுவர்கள் உட்பட 11 பேர் அடங்கிய குழுவை வெளிநாட்டு ஒன்றுக்கு அழைத்துச் சென்றிருந்தார்.

இந்த விஜயத்தின் போதும் ஒரு வயது குறைந்த வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அத்துடன் குறைந்த வயது 2 சிறுவர்களைப் பயன்படுத்தி இணையம் மூலம் ஒரு சிறுமி ஒருவரை துன்புறுத்துவதற்கும் முயன்றதாக தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.