சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்க புதிய நீதிமன்றம் ஒன்றை அமைக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்...

´சில விடயங்களை மறைத்து வைத்திருக்க முடியாது. பூப்போன்ற சிறுவர்களுக்கு அநீதி இழைக்கப்படுமாக இருந்தால் அதற்குரிய தண்டணையை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க நேரிடும். அதற்கான சட்டங்களை இயற்ற முடியும்´

அமைச்சரவை அனுமதியுடன் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்க புதிய நீதிமன்றம் ஒன்றை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்´ என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.