ஆர்மி மொஹிடீனை கைது செய்யாமைக்கான பொறுப்பினை உளவுப் பிரிவும், CID உம் ஏற்க வேண்டும் - பூஜித

Rihmy Hakeem
By -
0


 ( எம்.எப்.எம்.பஸீர்)

பொலிஸாரின் அலட்சியம் பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினர் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக சுற்றி வர உதவியுள்ளது என முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.

அத்துடன் 2017ஆம் ஆண்டு பிடியாணை பெறப்பட்டிருந்த நிலையில் ஆர்மி மொஹிதீனை கைது செய்யாமைக்கு தேசிய உளவுச் சேவை மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகியன இரண்டும்  சமனான பொறுப்பினை ஏற்க வேண்டும்.

மேலும் தேசிய உளவுச் சேவை தனக்கு தேவையான ஒத்துழைப்புக்களை குறித்த விடயத்தில் வழங்கவில்லை எனவும், அந்த உளவுச் சேவை தனது கட்டுப்பாட்டில் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் ஆஜராகி ஆணைக் குழுவின் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து சாட்சியமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)