நாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவல் இருந்தமை தொடர்பில் மக்கள் இன்று மறந்து செயற்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதார தரப்பினர் வழங்கியுள்ள சுகாதார நடைமுறைகளை சரிவர கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவலை வெறுமனே 50 நாட்களுக்குள் தடுக்க முடிந்தது. அதேபோல் மக்கள் அதனை கட்டுப்படுத்த பெரும் தியாகங்களையும், தியாகங்களையும் செய்தனர். மக்களின் அர்ப்பணிப்பால் தான் இந்த நிலைமை 50 நாட்கள் என்ற குறுகிய காலத்தில் கட்டுப்படுத்த முடிந்தது. எனினும் நாட்டில் கொவிட் 19 இல்லை என சொல்வது மிகவும் வருந்தக்க விடயம். தொடர்ந்தும் முகமுடிகளை அணிவது மிக முக்கியம். அத்துடன் சுகாதார தரப்பினர் வழங்கியுள்ள சுகாதார நடைமுறைகளை கிரமாக கடைப்பிடிக்க வேண்டியதும் அவசியம். இவற்றை கட்டாயம் கடைப்பிடிக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கின்றோம்.´ என்றார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.