Gampaha Football League - 2019/20 கால்பந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டிக்கு கஹட்டோவிட்ட JF கழகம் தகுதி பெற்றதுடன், Division 2 இற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

இன்றைய தினம் (20) கம்பஹா ஶ்ரீ போதி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் கம்பஹா ஶ்ரீ போதி கழகத்தினை 3 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பின்னர் கஹட்டோவிட்ட JF கழகம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

JF கழகம் சார்பில் ருமைஸ் இரு கோல்களையும், நப்ராஸ் ஒரு கோல் இனையும் அடித்து கழகத்தின் வெற்றியை உறுதி செய்தனர். 

மேலும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி ரன்பொகுனுகம கழகம் மற்றும் கம்பஹா ஜெட்லைனர்ஸ் இடையில் நடைபெறவுள்ளதுடன், வெற்றி பெறும் கழகம் கஹட்டோவிட்ட JF இனை இறுதிப்போட்டியில் சந்திக்கும். 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.