இன்றைய தினம் இதுவரை 739 பேருக்கு கொரோனா! ஒரே நாளில் அதிக தொற்றாளர்கள்!!

Rihmy Hakeem
By -
0

 இலங்கையில் இன்றைய தினம் (06) இதுவரை 739 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுவே இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நாளாகும்.

அவர்களில் 729 பேர் திவுலபிடிய கொத்தணி மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் எனவும், 10 பேர் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.

இதுவரை இலங்கையில் 4252 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

அவர்களில் 973 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)