பஞ்சாப் அணியை இன்று (04) சிஎஸ்கே (Chennai Super Kings) எதிர்கொள்ள இருக்கும் நிலையில் சிஎஸ்கேவின் தொடக்க வீரர் வாட்சன் தனது ஆட்டம் குறித்து பேட்டி அளித்துள்ளார். 

இன்று சிஎஸ்கே அணிக்கு மிக முக்கியமான நாள். வரிசையாக ஐபிஎல் போட்டிகளில் தோல்வி அடைந்து வரும் சிஎஸ்கே இன்று வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி உள்ளது. 

ராஜஸ்தான், டெல்லி, ஹைதராபாத் அணிகளிடம் சிஎஸ்கே தோல்வி அடைந்த காரணத்தால் சிஎஸ்கே பிளே ஆப் செல்லுமா என்று கேள்விகள் எழுந்துள்ளது. பஞ்சாப் அணியை எப்படியாவது வீழ்த்தியாக வேண்டிய கட்டாயம் கேப்டன் தோனிக்கு ஏற்பட்டுள்ளது. 

வாட்சன் சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கு முக்கிய காரணமாக வாட்சன் பார்க்கப்படுகிறார். இவர் சரியாக பேட்டிங் செய்வது இல்லை. தொடக்க வீரராக இறங்கி 10 ரன்கள் கூட அடிப்பது இல்லை. கடந்த 4 போட்டிகளாக இவர் சரியாக பேட்டிங் செய்யவில்லை. சிஎஸ்கே தோல்விக்கு இவர் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். கருத்து காரணம் இந்த நிலையில் வாட்சனை அணியில் இருந்து நீக்க வேண்டும். அவர் இனியும் ஓப்பனிங் செய்ய கூடாது என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. 

வாட்சனுக்கு பதில் இந்திய வீரர் யாரையாவது அணியில் எடுத்து ஓப்பனிங் இறக்க வேண்டும். வாட்சனுக்கு இதற்கும் மேல் ஓப்பனிங் வாய்ப்பு கொடுக்க கூடாது என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. கோரிக்கை என்ன இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணியின் துடுப்பாட்ட வரிசை குறித்து தற்போது வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார். 

அதில், நானே ஒப்புக்கொள்கிறேன், மத்திய வரிசையில் ஆடும் வீரர்கள் மீது நாங்கள் அதிக அழுத்தம் போடுகிறோம். தொடக்க வீரர் என்ற வகையில் நானே இதை ஏற்றுக்கொள்கிறேன். மத்திய வரிசை வீரர்கள் அதிக அழுத்தத்தினை சந்திக்கிறார்கள். மாற்ற வேண்டும் அவர்களால் சரியாக ஆட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாததற்கு இதுதான் காரணம். தொடக்கம் சரியாக இல்லாமல் போனதே இதற்கு காரணம். எங்கள் ஆட்டத்தில் சில விஷயங்களை மாற்ற வேண்டும். நாங்கள் ஆடும் போக்கில் சில விஷயங்களை மாற்றினால் எல்லாம் சரியாகும். கூர்மை நாங்கள் இன்னும் கூர்மையாக செயல்பட வேண்டும். தொடக்கம் சரியாக இருக்க வேண்டும். இன்னும் கவனத்துடன் ஆடினால் ஆட்டம் எங்கள் பக்கம் வர தொடங்கும் என்றும் வாட்சன் தெரிவித்துள்ளார். வாட்சனின் இந்த பேச்சு நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது. மத்திய வரிசை வீரர்கள் மீது நாங்கள் அதிக அழுத்தம் போட்டு உள்ளோம் என்று வாட்சன் ஒப்புக்கொண்டு உள்ளார். 

இதனால் அவர் எதாவது முக்கிய முடிவு எடுக்க போகிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது. போன வருடம் அதாவது அணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளாரா என்று கேள்விகள் எழுந்துள்ளது. போன வருடம் தான் அணியில் சரியாக விளையாடாதது குறித்து பேசிய வாட்சன், நான் சரியாக பேட்டிங் செய்யவில்லை. வேறு அணி என்றால் என்னை அணியில் இருந்து நீக்கி இருப்பார்கள். ஆனால் சிஎஸ்கேவில் மட்டுமே எனக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்தனர் என்று வாட்சன் குறிப்பிட்டு இருந்தார். இந்த முறை வாட்சன் நேரடியாக தனது தவறை ஒப்புக்கொண்டு உள்ளார் . 

ஒப்புக்கொண்டார் 

வாட்சனின் இந்த பேச்சு காரணமாக அவர் தானாக அணியில் இருந்து வெளியேறும் எண்ணத்தில் இருக்கிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது. தன்னை நீக்க மாட்டார்கள் என்பதால் தோல்விக்கு பொறுப்பேற்று தானாக பதினொரு பேரில் இருந்து வெளியேற வாட்சன் நினைக்கிறாரா என்று கேள்விகள் எழுந்துள்ளது. 

அதே சமயம் வாட்சனின் பேச்சு அவர் மீண்டும் வழமைக்கு திரும்புவதற்கான அறிகுறி என்றும் கூறுகிறார்கள். வாட்சன் இப்படித்தான். வாட்சன் பொதுவாக அதிகம் பேச மாட்டார். ஆனால் அவர் இப்படி பேசுகிறார் என்றால் கண்டிப்பாக இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடுவார். கண்டிப்பாக அவர் இன்று வழமைக்கு திரும்புவார். அதனால்தான் அவர் இப்படி துணிச்சலாக தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார் என்று கூறுகிறார்கள்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.