பாராளுமன்றத்தில் இன்று (17) பிற்பகல் 1.40க்கு நிதி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சமர்பிக்கவுள்ளார்.

வரவு செலவு திட்டத்தின் மீதான விவாதம் 21 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரையில் வரவு செலவு திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

இதுதொடர்பில் வாக்கெடுப்பு 21 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

23 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 10 திகதி வரையில் குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளது.

டிசம்பர் மாதம் 10 திகதி மாலை 5.00 மணிக்கு வரவு செலவு திட்டத்தின் 3 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும் என்று பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்தார்.

வரவு செலவு திட்ட விவாதம் காலை 9.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.