நாட்டில் நேற்றைய தினத்தில் (16) மாத்திரம் புதிதாக 382 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர்.

இதனையடுத்து கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,674 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுள் 231 பேர் கொழும்பு மாட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம் 42 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இது தவிர, களுத்துறை மாவட்டத்தில் 20 தொற்றாளர்களும், குருநாகல் மாவட்டத்தில் 11 தொற்றாளர்களும், காலி மாவட்டத்தில் 02 தொற்றாளர்களும், இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, யாழ்ப்பாணம், நுவரெலியா மாவட்டங்களில் தலா ஒரு தொற்றாளரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதுவரை மொத்தமாக கொழும்பு மாவட்டத்தில் 5,899 தொற்றாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 4,998 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்றைய தினம் 8 பொலிஸ் அதிகாரிகள், 5 பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர், போகம்பர சிறைக்கைதிகள் 51 பேர் மற்றும் வெலிகட சிறைச்சாலையில் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில் கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸாரின் மொத்த எண்ணிக்கை 785 ஆக உயர்வடைந்துள்ளது. (SiyaneNews)





கருத்துரையிடுக

Blogger இயக்குவது.