அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் ஊடாக, 2015ஆம் ஆண்டு, நவம்பர் 13ஆம் திகதி அமைக்கப்பட்ட தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவுக்கு வருகின்றது.
அத்துடன் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவின் பதவிக் காலமும் இன்றுடன் நிறைவுக்கு வருகின்றது.
குறித்த தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல், ஜனாதிபதி சட்டத்தரணி நளின் அபேசேகரவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
எனினும் அரசமைப்பின் 20ஆம் திருத்தத்துக்கு அமைய, புதிய ஆணைக்குழுவில் 5 உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், இதுவரை உறுப்பினர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை.
20ஆம் திருத்தத்துக்கு அமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவால் பெயரிடப்படும் உறுப்பினர்களின் பெயர்களை நாடாளுமன்ற பேரவைக்கு சமர்ப்பித்து, நாடாளுமன்ற பேரவை தமது ஆய்வை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த பின்னரே, தேர்தல் ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
TamilMirror