கண்டி நகர எல்லைப் பகுதிக்குள் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (26) தொடக்கம் அடுத்த மாதம் 4ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.