கொழும்பு - 02, யூனியன் பிளேசில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்த 93 இந்தியர்களுள் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதென, சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் 9 பேர் பிங்கிரிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனரெனவும் 44 பேர் ஏனைய வைத்தியசாலைகளுக்கு அனுப்பவுள்ளதாகவும் தெரியவருகிறது.

அத்துடன், குறித்த தொற்றாளர்களுடன் பணியாற்றிய ஏனையவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.