கொரோனா வைரஸை கொன்றொழிப்பதற்காக, கடலிலும் குதித்து தன்னுயிரை மாய்த்துக் கொள்வேன் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தார். அவர், இன்னும் குதிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி, பவித்ரா அஞ்சுவது ஏன்? என்பதற்கு புதுவகையான விளக்கத்தையும் கொடுத்துள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா கடலில் குதித்துவிடுவாரோ என்ற அச்சத்தால் திமிங்கலங்களும் கரைக்கு வருகின்றன என, சஜித் அணியின் எம்.பியான நளின் பண்டார கிண்டல் செய்துள்ளார்.

கொழும்பில், இன்று (05) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாணந்துரை கரையில், திமிங்கில குடும்பமொன்று கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Source

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.