அரச, தனியார் நிறுவனங்களின் பணியாளர்களுக்காக பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் சுகாதாரப் பாதுகாப்புடன் தமது வேலைத் தளங்களுக்கு சென்று வரும் நோக்கில் இந்தப் பணியாளர்களுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் நடாத்தப்பட உள்ளன.
இந்த சேவைகளைப் பெற விரும்பும் பணியாளர்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, விண்ணப்பமொன்றை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதனை பூரணப்படுத்தி, மின்னஞ்சல், வாட்ஸ்-அப் அல்லது தொலைநகல் ஊடாக அனுப்பி வைக்க வேண்டும்.
இணையத்தள முகவரி: www.ntc.gov.lk
மின்னஞ்சல் முகவரி: staff-service@ntc.gov.lk
வாட்ஸ் அப் இலக்கம்: 070-436-1101
தொலைநகல் இலக்கம்: 0112-503-725