பொத்துவில் பிரதேச சபையின் பதில் தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் ஊறணியிலுள்ள அவரது விடுதியில் தங்கியிருந்த போது விடுதியில் உள்நுழைந்த குழுவினர் அவர் மீது வாள் மற்றும் பொல்லால் தலையில் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (14) இரவு 7 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்தனர்.

பதில் தவிசாளர் அவரது விடுதியில் சம்பவ தினமான நேற்று இரவு 7 மணியளவில் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த போது மதில் மேலால் ஏறி வந்த இனந்தெரியாத குழுவினர் வாள் மற்றும் பொல்லால் தலையில் தாக்கியதில் அவர் சத்தமிட்டபோது அங்கிருந்த அவரது தந்தையார் அங்கு சென்றதையடுத்து தாக்குதல் நடாத்தியவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதனையடுத்து படுகாயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிகமான விசாரணைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-சரவணன்-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.