இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் கோரிக்கையின் பேரில் துருக்கி - இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கம் ஸ்தாபிப்பு (படங்கள்)

Rihmy Hakeem
By -
0





ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் கோரிக்கையின் பேரில் துருக்கி-இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஸ்தாபித்தல் நிகழ்வு  இன்று(25) பாராளுமன்றத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேயவர்தன,இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான துருக்கித்  தூதுவர் ஆர்.டிமெட் செர்கெர்சியோக்லு ஆகியோர் உட்பட இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் செயலாளராக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சண ராஜகருணாவும் தெரிவு செய்யப்பட்டனர்.(Siyane News)








கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)