ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக சில நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை மீதான வாக்கெடுப்பை நாளை (23) நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இன்றைய தினம் (22) குறித்த வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி, வாக்கெடுப்பானது ஜெனீவா நேரத்தில் காலை 9 மணிக்கு (இலங்கை நேரத்தின் பிராகரம் பிற்பகல் 1 மணிக்கு) இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (Siyane News)