கனகராசா சரவணன்

சஹ்ரான் கடந்த 2018ஆம் ஆண்டு பயிற்சிமுகாம் ஒன்றில் பெண்களுக்கு பயிற்சியளித்துள்ளதுடன் அவர்கள் உறுதிமொழியும் செய்தனர். இதன்போது அவர்களுக்கு உணவு வழங்கிவந்த மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த 44 வயதுடைய முஹமட் இர்பான் மற்றும் பயங்கரவாத புலனாய்வு தடுப்பு பிரிவினரால் ஏற்கெனவே, கைது செய்யப்பட்ட வம்மா உம்மா அடிப்படைவாத வட்ஸ்ப் குருப்பில் செயற்பட்டு வந்தவர்கள் வழங்கிய தகவலுக்கமைய அந்த குருப்பில் செயற்பட்டுவந்த  அம்பாறை நிந்தவூரைச் சேர்ந்த 31 வயதுடைய அலியர் காதிக் ஹக்  உட்பட இருவரையும் அவரவர் வீடுகளில் வைத்து வெள்ளிக்கிழமை இரவு பயங்கரவாத புலனாய்வு தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். 

அவ்வாறு உறுதிமொழி எடுத்துகொண்டவர்களுக்கு உணவு வழங்கிவந்த காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரும் மற்றும் அடிப்படைவாத வட்ஸ்ப் குருப்பில் செயற்பட்ட நிந்தவூரைச் சேர்ந்த ஒருவருமெ இருவர்,   பயங்கரவாத புலனாய்பு தடுப்பு பிரிவினரால் வெள்ளிக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்தவாரம் வம்மா உம்மா அடிப்படைவாத வட்ஸ்ப் குருப்பில் செயற்பட்டுவந்த 6 பேரை பயங்கரவாத புலனாய்வு தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.