தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தூர இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் கொழும்புக்கு திரும்புவதற்கு வசதியாக இன்று (17) முதல் தூர இடங்களுக்கான  ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமை (19) முதல் அனைத்து புகையிரத போக்குவரத்து சேவைகளும் வழமைக்கு திரும்பவுள்ளதாக  ரயில்வே  திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.