கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் காணப்படும் இடவசதியை விட அதிகமான நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலையில் 120 நோயாளர்களுக்கு இடவசதி காணப்படும் நிலையில் தற்போதைய நிலையில் 138 பேர் அங்கு சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள 08 படுக்கைகளும் நிரம்பியுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் சுமார் 20 சதவீத நோயாளிகளுக்கு பிராணவாயு வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், பிராணவாயுவின் தேவை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் சிங்கள புத்தாண்டுக்குப் பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Adaderana 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.