நேற்று இடம்பெற்ற (26) இலங்கைக்கு எதிரான மூன்றாவது T20 போட்டியில் 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 - 0 என்ற அடிப்படையில் வெள்ளையடிப்பு செய்து தொடரை கைப்பற்றியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 18.5 ஓவர்களில் 91 ஓட்டங்களுக்கு சுருண்டது. 

இலங்கை அணி சார்பாக துஷ்மந்த சமீர நான்கு விக்கட்களை கைப்பற்றினார். 

இங்கிலாந்து சார்பாக டேவிட் வில்லி மூன்று விக்கெட்களையும் சேம் கரன் இரு விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அதிக பட்சமாக இங்கிலாந்தின் டேவிட் மாலன் 76 ஓட்டங்களையும் ஜோன்னி பெயார்ஸ்டோ 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஆட்ட நாயகனாக டேவிட் மாலனும் தொடர் நாயகனாக சேம் கரனும் தெரிவானார்கள்.

 (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.