2021 ஜுன் மாதம் 09 ஆந் திகதி ”இலங்கையின் நிலைமை பற்றி குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்தல்” தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கவனம் செலுத்தியுள்ளது.

இப் பிரேரணையைில் “ புதிய அரசாங்கத்தினால் கடந்த அரசாங்கத்தின் கீழ் அடைந்து கொண்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை துரிதமாக மீளத் திருப்புகின்ற நிலைமையில், இலங்கையின் மனித உரிமைகள் தொடர்ந்தும் சீர்குலைந்து செல்லுகின்றன என அவதானிக்க முடிகின்றது. இதில் இலங்கையின் பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் பாரிய அளவிலான மனித உரிமை மீறல்களை ஏற்படுத்தும் வகையில் அதனை துஷ்பிரயோகம் செய்யும் சூழ்நிலையையும் அது குறிப்பாக எடுத்துக்காட்டுகின்றது.. ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்ற பிரபல சட்டத்தரணிகள் மற்றும் கவிஞர் அனாப் ஜசீம் போன்ற கலைஞர்கள் உட்பட அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை இலக்கு வைத்து பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை இதில் குறிப்பிடுகின்றது. மேலும் 2021 ஆண்டு மார்ச்சு மாதம் வெளியிட்ட புதிய ஒழுங்குவிதிகள் மூலம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விரிவுபடுத்தியமை பற்றியும் குறிப்பிடுகின்றது. சிறுபான்மையினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகின்ற பிரிவினைவாதம் மற்றும் வன்முறைகள், தவறான தகவல்களை வழங்குவதாகக் கூறி அடக்குமுறை சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்காக புதிய திட்டங்கள், காலாவதியான குற்றவியல் சட்டத்தை தொடர்ச்சியாகப் பயன்படுத்தல், இலங்கையில் பொதுமக்கள் விவகாரங்களை இராணுவமயமாக்குதலைத் துரிதமாக்குதல், சர்வதேச சட்டங்களின் பிரகாரம் 2019 ஆண்டு நிகழ்ந்த ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்பு குறித்த கடுமையான, பக்கச்சார்பற்ற மற்றும் முழுமையான விசாரணைகள் நடத்துதுவதில் இருந்தும் தவறியமை போன்ற விடயங்களை உள்ளடக்கியதான பல பிரதான விடயங்கள் தொடர்பில் இதில் சுட்டிக்காட்டப்படுகின்றன.

ஐக்கிய மக்கள் சக்தி பலமுறை தற்போதைய அரசாங்கம் இலங்கையின் மனித உரிமைகளை மோசமான நிலைமைக்கு இட்டுச் செல்லல், அரசாங்கத்தின் இனவெறி, பாரபட்சமான கொள்கையில் கவனம் செலுத்துதல் பற்றி பலமுறை தெரிவித்துள்ளது. . இருபதாவது திருத்தத்தை அறிமுகப்படுத்தியதன் மூலமும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை குறிவைத்து விசாரணை ஆணைக்குழுக்களை நிறுவுவதன் மூலமும் இலங்கையின் சனநாயக நிறுவனங்கள் மீது திட்டமிட்டு தாக்குதல்களை மேற்கொள்ளுவதை நாங்கள் கண்டிக்கிறோம். தவறான தகவல்களைத் தடுக்க சட்டங்களை அறிமுகப்படுத்துவதாக் கூறி  ஜனநாயக சுதந்திரத்தை மேலும் கட்டுப்படுத்தவும் அரசாங்கம் முயற்சிக்கிறது. இவைகள் மக்களின் கருத்துச் சுதந்திரத்தை மேலும் கட்டுப்படுத்துவதற்கும் அடக்குவதற்குமான ஒரு இழிவான முயற்சியே தவிர வேறொன்றுமில்லை. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரிகளை இந்த அரசாங்கம் வெளிப்படுத்தத் தவறியதையும் நாங்கள் கண்டிக்கிறோம், மேலும் இந்த தாக்குதல்கள் குறித்து முழுமையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைக்கு மீண்டும் மீண்டும் அழைப்பு விடுக்கின்றோம்.

இலங்கையில் இவ்வாறு வேகமாக மோசமடைந்து வரும் சூழ்நிலையில், ஒரு இறுதி முடிவாக, இலங்கையின் ஜி.எஸ்.பி பிளஸ் நிலைமை மற்றும் அதனுடன் தொடர்புடைய நன்மைகளை தற்காலிகமாக அகற்றுவதற்கான நடைமுறைத் திட்டத்தைத் தொடங்க போதுமான ஆதாரங்கள் உள்ளதா என்பதை கவனமாக மதிப்பிடுவதற்கு இந்த விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுமாறு ஐரோப்பிய ஒன்றியம் பிரேரணையொன்றை நிறைவேற்றி குறித்த அறிக்கையைக் கோரியுள்ளது. ஆதலால்  இந்தப் பிரேரணையைத் தொடர்ந்து  இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ்  சலுகையை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வர்த்தக வசதியின் கீழான சலுகைகள் 2017 ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் இலங்கைக்கு பெற முடிந்தது என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். இந்த வசதியின் கீழ் வழங்கப்படும் கட்டண சலுகைகளின் நேரடி விளைவாக, பல இலங்கை ஏற்றுமதியாளர்கள், குறிப்பாக ஆடைத் தொழிலில் ஈடுபடுபவர்கள், ஏராளமான நன்மைகளைப் பெற்றுள்ளனர்.  சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கு ஏற்ப பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பல சிக்கலான பிரிவுகளைத் திருத்துவதற்கு இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த வசதியை வழங்குவதில் ஒப்புக் கொள்ளப்பட்ட நிபந்தனைகளில் ஒன்றாகும்.  இது பற்றி ஐரோப்பிய ஆணைக்குழு 2010 ஜூன் 17 திகதியன்று முன்னாள் வெளியுறவு அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தொடர்புடைய ஏற்பாடுகளை கூறியுள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் குறிப்பிட்ட ஏற்பாடுகளை இரத்து செய்ததன் மூலமோ அல்லது திருத்தியதன் மூலமோ அல்லது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மாற்றுவதற்காக சர்வதேச நடைமுறைகள் சட்டத்திற்கு ஏற்ப புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலமோ 2017 இல் ஜீ எஸ் பீ பிளஸ் சலுகையை வெற்றிகரமாக மீட்டெடுக்க இலங்கை அரசாங்கத்தால் முடிந்தது.

அவ்வாறு கட்டுப்பட்டுள்ள நிபந்தனைகளுகளை மதிக்கத் தவறியதால், இலங்கை மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அந்த முக்கியமான ஆதரவை இழக்க உள்ளனர். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தற்போதைய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் கூறியுள்ள போதிலும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைத் திருத்துவது அல்லது சர்வதேச நடைமுறைகளுடன் ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பான எந்தவொரு அர்த்தமுள்ள செயல்முறையையும் அறிமுகப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது. 

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைத் திருத்துவதற்குப் பதிலாக, அரசாங்கம் அதன் நோக்கத்தை மேலும் விரிவுபடுத்தும் விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளது. முறையான நீதிமன்ற அதிகார எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தின் முன் தவறு தொடர்பில் எந்தவித சாட்சி விசாரணைகள் இன்றி புனர்வாழ்வு திட்டங்கள் என சந்தேக நபர்களை தொடர்புபடுத்துகின்ற அங்கீகாரம் இந்த புதிய விதிமுறைகள் மூலம் அதிகாரபீடங்களுக்கு வழங்கப்படுகின்றமை மூலம் தெளிவாகத் தெரிகின்றது.

தொடர்ச்சியான தோல்வி மற்றும் அதன் வெளிநாட்டு உறவுகளை திறம்பட நிர்வகிக்க இயலாமை மற்றும் நாட்டின் சட்டத்தை நடைமுறைப்படுத்த இயலாமை காரணமாக இலங்கையர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய நெருக்கடியை அரசாங்கம் உருவாக்கியுள்ளது. அண்மையில் நிறைவேற்றப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத் தீர்மானம் இந்த தோல்வியுற்ற அரசாங்கத்தின் மற்றொரு வெளியுறவுக் கொள்கையின் தோல்வியை எடுத்துக்காட்டுகிறது. முதலீட்டு ஒன்றியங்களின் எதிர்பார்ப்புகளான, இலங்கை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே திறந்திருக்கும் இரண்டு பெரிய ஏற்றுமதி சந்தைகளை விரைவாக இழப்பதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனத் தெரிவருகின்றது.

பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக, நடைமுறைத் தீர்வுகளை முன்வைக்காமல் தற்போதைய அரசாங்கத்தின் தோல்விகளை சுட்டிக்காட்ட ஐக்கிய மக்கள் சக்தி விரும்பவில்லை.  பயங்கரவாத தடைச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான முந்தைய முயற்சி சர்ச்சையில் சிக்கியது என்பதை நினைவில் கொள்வோம். எவ்வாறாயினும், இலங்கையின் சட்டத் துறையில் நிபுணர்களின் குழுவான இலங்கையின் சட்ட ஆணைக்குழு, தேசிய பாதுகாப்பைப் உறுதிப்படுத்துவது குறித்த வரைவுச் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது சர்வதேச சட்டங்களுடன் பொருந்தக்கூடிய ஒரு சுருக்கமான, பயனுள்ள சட்ட ஆவணமாகும் சட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளைப் பரிசீலனை செய்துவரும் ஐக்கிய மக்கள் சக்தியானது, இந்தப் பிரேரணைகளை பரிசீலிக்கின்ற நடைமுறையொன்றை பாராளுமன்றத்தில் ஆரம்பிப்பதற்கு முயற்சியொன்றை எடுக்கும்.

எமது மனித உரிமைகள் மற்றும் சனநாயகத்துக்கு கலங்கம் ஏற்படாத ஒரு வலுவான அத்துடன் பயனுள்ள தேசிய பாதுகாப்புக் கட்டமைப்பொன்றை உருவாக்க முடியும் என்பது ஐக்கிய மக்கள் சக்தியின் பலமான நம்பிக்கையாகும்.


எரந்த ஹெட்டிஆரச்சி

ஊடகப்பிரிவு - ஐக்கிய மக்கள் சக்தி

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.